தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை அறிவித்துள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Categories