Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. “கோடப்பந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு”…!!!!!

ஊட்டியில் கனமழை காரணமாக பல இடங்களில் நீர் புகுந்தது‌.

நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. சென்ற இரண்டு நாட்களாகவே கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கனமழை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வானம் மேகம் கூட்டமாக காணப்பட்டு பின்னர் 12 மணி அளவில் மழை பெய்ய ஆரம்பித்தது.

இந்த மழையானது பல இடங்களில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை காரணமாக கோடபந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு எடுத்தது. இதனால் வாசனை ஓட்டிகள், வியாபாரிகள், மாணவ -மாணவிகள் என பலரும் அவதிக்கு உள்ளானார்கள்.

Categories

Tech |