தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அனைத்து வாகனங்களும் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழை நீர் பெருக்கு காரணமாக சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதன்படி ஈவேரா சாலை கங்கு ரெட்டி சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கங்களை மற்றும் கணேசபுரம் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளது. மேலும் மழை நீர் பெருக்கு காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பெரம்பூர் பேரக்ஸ் ரோடு x ஸ்டரகான்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு போலீஸ் ஸ்டேஷன் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்படுகின்றன. நசரத்பேட்டை நீதிமன்றம் அருகில் நீர் தேங்கியுள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யவில்லை. K-5 பெறவல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 70 அடி சாலையில் நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டிமலஸ் சாலை-புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் நீர் தேங்கி உள்ளது. அதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை. திருமலை பிள்ளை ரோடு, காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வள்ளுவர் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.வாணி மஹால் மற்றும் பென்ஸ் பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது. வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வாணி மஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை ரோட்டில் செல்லலாம்.