தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 2 சுரங்கப் பாதைகள் மற்றும் சில சாலைகளில் நீர் தேங்கி இருக்கிறது. இதனையடுத்து அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மழை நீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு என்னென்ன?
# சென்னையில் இருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வழியே போகக்கூடிய வாகனங்களை புளியந்தோப்பு நெடுஞ்சாலை அம்பேத்கர் கல்லூரி சாலை சந்திப்பிலிருந்து திருப்பிவிடப்பட்டு, காந்திநகர் ரவுண்டானா வழியாக பேசின்பிரிட்ஜ் பாலாத்தின் மேலே சென்று வியாசர்பாடி சுரங்கம்பாதை வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
# புளியந்தோப்பில் இருந்து சென்னையை நோக்கி கணேசபுரம் சுரங்கப்பாதை வழியே வரும் வாகனங்களை அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து திருப்பிவிடப்பட்டு, பெரம்பூர் மேம்பாலம் வழியாக ஜமாலியாரோடு, ஓட்டேரி, அயனாவரம் செல்வதற்கு வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
# இரங்கராஜபுரம் சுரங்கப் பாதை வழியே போகக்கூடிய வாகனங்களை அதின் உள்ளே அனுமதிக்கப்படாமல் இரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம்
சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளை சென்னையில் இருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக போகக்கூடிய வாகனங்களை புளியந்தோப்பு நெடுஞ்சாலை ஸ்டராகான்ஸ் சாலை சந்திப்பிலிருந்து திருப்பிவிடப்பட்டு, ஓட்டேரி வழியாக பெரம்பூர் மார்கமாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
# சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளை புளியந்தோப்பில் இருந்து சென்னையை நோக்கி கணேசபுரம் சுரங்கப்பாதை வழியே வரும் வாகனங்களை அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து திருப்பிவிடப்பட்டு பெரம்பூர் மேம்பாலம் வழியாக ஜமாலியா ரோடு, ஓட்டேரி, அயனாவரம் செல்வதற்கு வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.