சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணையின்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தொடர் மழையின் காரணமாகவும், தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதாலும், சென்னை புறநகர் ரயில்களின் நேரம் ஞாயிறு அட்டவணையின்படி மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை- சென்ட்ரல், அரக்கோணம்- சென்ட்ரல் , கும்மிடிப்பூண்டி மற்றும் சூளூர்பேட்டை மார்க்கங்களிலும், சென்னை கடற்கரை, செங்கல்பட்டு கடற்கரை, வேளச்சேரி மார்க்கங்களிலும் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.