Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி!…. தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையில் ஓசூர், தேன்கனிக் கோட்டை தாலுகாக்களில் நேற்று முன் தினம் இரவு பலத்த மழைபெய்தது. இந்நிலையில் ஓசூர் அருகேயுள்ள திப்பாளம் ஏரி முழுகொள்ளளவை எட்டியது. அங்கு இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் திப்பாளம் பகுதியிலுள்ள தனியார் குடியிருப்புக்கு போககூடிய பிரதான தரைப் பாலத்தை தண்ணீர் அடித்து சென்றது. இதனால் அப்பகுதிக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

காட்டாற்று வெள்ளத்தில் தரைப் பாலம் அடித்து செல்லப்பட்டதால் அப்பகுதியை சேர்ந்த 300க்கும் அதிகமான பொதுமக்கள், வீட்டிலிருந்து வெளியே வர சிரமப்பட்டனர். மேலும் பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள்கூட வாங்க முடியாமல் தவித்தனர். இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், வருவாய்த் துறையினர் அங்கு சென்று பால், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள். அத்துடன் அப்பகுதியில் தரைப்பாலம் அமைக்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். திப்பாளம் கிராமத்திற்கு போகும் சாலை வெள்ளநீரில் மூழ்கி, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கிராமமக்கள், தத்தளித்தவாறு சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |