தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன.வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று வரை 11,772 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 15,740 கன அடியாக அதிகரித்துள்ளது. அதன்படி அணையின் நீர்மட்டமும் 113.59 அடியில் இருந்து 114.46 அடியாக அதிகரித்துள்ளது.
தற்போது அணையின் நீர்மட்டம் 84.91 டிஎம்சி ஆக உள்ளது. இதையடுத்து அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் வெளியேற்றத்தை காட்டிலும் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைப் போலவே அனைத்து அணைகளிலும் நீர் நிரம்பி வழிகிறது.