Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் கனமழை எதிரொளியாக தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

Categories

Tech |