Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. “நீரில் மூழ்கிய உப்பளங்கள்” … உப்பு உற்பத்தி பாதிப்பு….!!!!!

தூத்துக்குடியில் பெய்த மழையால் உப்பளங்கள் நீரில் மூழ்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 22,000 ஏக்கரில் உப்பளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. இங்கு 30,000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள். தூத்துக்குடியில் வருடத்திற்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது.

உப்பு உற்பத்தி செய்வதற்கான உச்சகட்ட சீசன் காலங்களாக ஜூலை, ஆகஸ்ட் உள்ளிட்ட மாதங்களில் அவ்வபோதும் மழை பெய்தாலும், மேல்திசை காற்று சரிவர வீசாதாலும் உப்பு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.

தற்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகி இருப்பதால் இந்த வருடத்திற்கான உப்பு உற்பத்தி சீசன் நிறைவுடைந்திருக்கின்றது. இந்த நிலையில் பெய்த மழையினால் உப்பளங்கள் நீரில் மூழ்கியது. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக உப்பு விலை உயரும் அபாயமும் ஏற்பட்டிருக்கின்றது.

Categories

Tech |