சென்னையில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புலால் மற்றும் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் பெருமளவு பாதிக்கப்பட்டன. அப்போது தொடர்ந்து பெய்த கனமழையால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. அதன் பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்தது. இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிகின்றன. கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் 5000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.