கர்நாடக மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில், அங்குள்ள காவிரி, நேத்ராவதி, குமாரதாரா, சௌபர்ணிகா, பால்குனி, நந்தினி ஆகிய ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக இதுவரை 15 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனவே கர்நாடகா மாநிலத்திலுள்ள கடலோர மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாட்கள் கனமழை எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக வரும் ஜூலை 12-ம் தேதி காலை 8:30 மணி வரை, கடலோர கர்நாடகா மாவட்டங்களான உத்தர கன்னடா, தட்சின கன்னடா, உடுப்பி போன்ற மாவட்டங்களுக்கு சிவப்பு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது