ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பதி திருமலை தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக திருப்பதி திருமலை இடையே வாகன போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் கனமழை, மண் சரிவு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் 2 மலைப்பாதைகளும் மூடப்பட்டுள்ளன.