Categories
மாநில செய்திகள்

கனமழை..! 4 மாவட்டங்களில் இன்று (01.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் இன்று (01.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேபோல சென்னை, செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மிக கனமழை எச்சரிக்கையால் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால், சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

 

Categories

Tech |