மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால், நவ.11ம் தேதி தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக கனமழை அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். விடுமுறை அளிக்கப்பட்டாலும், அதனை ஈடுசெய்ய சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என தெரிகிறது.