குடும்ப பிரச்சனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராந்தம் கிராமத்தில் லதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது கணவர் வாசுதேவனுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லதா கடந்த 18-ஆம் தேதி உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதில் படுகாயமடைந்த லதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லதா நேற்று பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து லதாவின் மகளான வாசுகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.