டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்..
2007 ஆம் ஆண்டு தொடக்க ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற எம்எஸ் தோனியின் தலைமையிலான இந்திய அணியில் இருந்த தினேஷ் கார்த்திக், 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2022 இல் RCB அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் அதிரடி பேட்டிங்கால் அனைவரது கவனத்தையும் தன் மீது திரும்ப வைத்தார்.. பெங்களூர் அணியில் சிறந்த பினிஷராக 7 போட்டிகளில் 205.88 சராசரியாக 210 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக் போட்டியில் முன்னணி ரன் எடுத்தவர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டிருந்தார்.
அதன்பின் இந்திய அணியில் இடம்பிடித்து ஒரு ஃபினிஷராக விளையாடி வருகிறார். கடைசியாக நடந்த ஆசியக் கோப்பையில் அவர் அணியில் இடம்பிடித்திருந்தும் முதல் போட்டியில் மட்டுமே ஆடினார். அதன்பின் பிளேயிங் லெவனில் அவர் இடம்பெறவில்லை..
முன்னதாக தினேஷ் கார்த்திக், நாட்டிற்காக விளையாடுவதே பெரிய நோக்கமாக இருந்தது. உலகக் கோப்பை நெருங்கி வருவதை நான் அறிவேன். நான் அந்த உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன், மேலும் இந்தியா எல்லையை கடக்க உதவ விரும்புகிறேன், ”என்று கூறினார்.
மேலும் பல நாடுகள் பங்கேற்கும் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று நீண்ட நாட்களாகிறது. இந்தியாவுக்கு உதவி செய்யும் நபராக நான் இருக்க விரும்புகிறேன். அதற்கு, நீங்கள் வித்தியாசமாகத் தயாராக வேண்டும், நீங்கள் பல விஷயங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும், மேலும் மக்கள் எழுந்து நின்று உங்களைக் கவனிக்கும் அந்த வீரராக முயற்சி செய்து, ‘ஏய் இந்த பையன் ஏதாவது ஸ்பெஷல் செய்கிறான், நான் அந்த பையனாக இருக்க விரும்புகிறேன். என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.. இதில் இடம் கிடைத்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார் கார்த்திக். அவர் தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தி, “கனவுகள் நனவாகும்” என்றுபதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, “சாம்பியன்” என்று கருத்து தெரிவித்தார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
அதேபோல ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சொந்த மண்ணில் விளையாடவுள்ள அணியிலும் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
ஆஸ்திரேலியா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
Champion 🫶 https://t.co/8BjL0HRU2h
— hardik pandya (@hardikpandya7) September 12, 2022
🚨 NEWS: India’s squad for ICC Men’s T20 World Cup 2022.
Rohit Sharma (C), KL Rahul (VC), Virat Kohli, Suryakumar Yadav, Deepak Hooda, R Pant (WK), Dinesh Karthik (WK), Hardik Pandya, R. Ashwin, Y Chahal, Axar Patel, Jasprit Bumrah, B Kumar, Harshal Patel, Arshdeep Singh
— BCCI (@BCCI) September 12, 2022