மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளில் அவரை வணங்கி போற்றுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களின் ஜனாதிபதியான டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனையொட்டி அனைத்து தரப்பினரும் அவரின் நினைவுகளை பகிர்ந்து மரியாதை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், ” அப்துல் கலாம் ஐயாவின் பிறந்த நாளில் அவரை வணங்கி நான் போற்றுகிறேன். ‘கனவு காணுங்கள், கனவுகளில் இருந்து சிந்தனை பிறக்கும், சிந்தனைகள் செயல்கள் ஆகும்”என்று கூறியவர் மதிப்பிற்குரிய அப்துல்கலாம்”என்று அவர் கூறியுள்ளார்.