அதிமுக ஊழல் பணத்தை கொண்டு சட்டமன்ற தேர்தலை வளைத்து விடலாம் என்று பகல் கனவு காண்கிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது, “தமிழக சட்டமன்ற தேர்தலை வளைப்பதற்கு ஊழல் பணத்தை கொண்டு அதிமுக பகல் கனவு காண்கிறது.
மக்களின் சக்திக்கு முன்னர் அதிமுகவின் பகல் கனவு சிதைந்து சிதறிவிடும் என்பதை தேர்தல் முடிவு நிரூபித்துக் காட்டும். வட்டியும் முதலுமாக கூட்டு வட்டியையும் சேர்த்து சட்டம் தன் கடமையை செய்யும்” என்று அவர் கூறியுள்ளார்.