Categories
அரசியல்

கனவு நொறுங்கிப்போகுது…. தேர்தல் கருத்துக்கணிப்பை தடை பண்ணுங்க…. மாயாவதி…!!!

பொதுவாக தேர்தலுக்கு முன்பாக எந்த கட்சி வெற்றி பெறும் என்று தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார் .இதுகுறித்து பேசிய அவர், உத்தரபிரதேசத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர்.

தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு விரைவில் கடிதம் எழுத உள்ளேன். மேற்குவங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி பின் தங்கியுள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால் கருத்துக்கணிப்பு முடிவுமாற்றாக தேர்தல் முடிவு இருந்தது. ஆட்சியைப் பிடிப்போம் என்று கனவு கண்டவர்களின் கனவு நொறுங்கிப்போனது. மீண்டும் ஆட்சி அமைத்தார் மம்தா. எனவே கருத்துக்கணிப்புகளால் மக்கள் தவறாக வழிநடத்த படக்கூடாது என்று பேசியுள்ளார்.

Categories

Tech |