சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டியில் பிரேமா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதுடைய டி.ஆர் கவுஷிகா என்ற மகள் உள்ளார். இவர் ஸ்ரீ சேஷாஸ் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் டால்பின் அகாடமி கிராஸ்மின்டன் பயிற்சியில் தினமும் ஈடுபட்டு சிறுமி தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இதனை அடுத்து ஓவியம், கல்வி, விளையாட்டு என பல துறைகளில் சிறந்து விளங்கும் காரணத்தினால் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில் சிறுமிக்கு கனவு மாணவர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Categories