மஞ்சேஸ்வரத்தை சேர்ந்த முகமது பாவா என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி அமினா(45). இவர்களுக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் 2000 சதுர அடியில் தனது கனவு வீட்டை முகமது கட்டி குடும்பத்துடன் குடியேறியுள்ளார். அதற்கு முன் தனது இரண்டாவது மகள் திருமணத்திற்காகவும் வீடு கட்டவும் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி தர முடியாமல் அவர் தவித்த நிலையில் கடன் முகமது கழுத்தை நெரித்த காரணத்தினால் வாழ்க்கையில் நிம்மதி பறிபோனது.
இதனை தொடர்ந்து தான் தர வேண்டிய ரூபாய் 45 லட்சம் கடன் தொகைக்காக வீட்டை விற்க முடிவு செய்துள்ளார். முகமது இதற்காக வீட்டு தரகரிடம் பேசி முடித்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு வீட்டை வாங்க நபர் ஒருவர் வருவதாக இருந்துள்ளார். அன்றைய தினம் மதியம் ஒரு மணிக்கு வெளியில் சென்ற முகமது கேரளா அரசின் லாட்டரி டிக்கெட் நான்கு வாங்கி உள்ளார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அதாவது மூன்று மணிக்கு லாட்டரி முடிவுகள் வந்தபோது முகமது வாங்கி ஒரு டிக்கெட் இருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து மகிழ்ச்சியின் உச்சத்திற்கு முகமது மற்றும் குடும்பத்தினர் சென்றுள்ளனர். இது பற்றி முகமது பேசும்போது நான்கு மாதங்களாக லாட்டரி சீட்டு வாங்கி வருகின்றேன் என்றாவது என் துயரம் முடிவுக்கு வராதா என நினைத்திருந்த நேரத்தில் இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடித்து இருக்கின்றது. கடன் சுமையால் சில மாதங்களாகவே நிம்மதி இல்லாமல் இருந்தோம். மேலும் என் வீட்டை வாங்குவதற்காக முன் பணத்தை கொடுக்க நபர் ஒருவர் வருவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் இந்த ஆச்சரியம் நடைபெற்றுள்ளது. இனி என் வீடு விற்பனைக்கு இல்லை என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.