Categories
அரசியல் மாநில செய்திகள்

கனிமொழியை முதல்வராக்குவாரா….? திறமை வாய்ந்த பெண் தானே…… முதல்வர் ஸ்டாலினிடம் சவால் விட்ட சீமான்….!!!!!

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9-ம் ஆண்டு நினைவு நாள் இன்று. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் நம்மாழ்வார் திருவுருவ படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வுக்கு பிறகு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மகளிர் நிலை உயர வேண்டும் என்று திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அப்படி கூறும் திமுக அரசு நாடாளுமன்றத்தில் எத்தனை பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்துள்ளது. அமைச்சரவையில் எத்தனை பெண்களுக்கு இடம் கொடுத்துள்ளது.

பொங்கல் பண்டிகையின் போது 400 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய வேண்டும் என்று திமுக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. பெண்கள் தாலி அறுப்பது தான் தலை நிமிர்ந்த செயலா?. இந்நிலையில் மகளிர் நிலை உயர முதல்வர் ஸ்டாலின் 2 வருடங்களுக்கு மட்டும் கனிமொழிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பாரா?. முதல்வர் ஸ்டாலினை விட கனிமொழி தகுதியானவர் என்று நான் நம்புகிறேன். முதல்வர் பதவியை ஸ்டாலின் தன்னுடைய தங்கைக்கு தான் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். கனிமொழியும் உங்கள் குடும்பம் தானே. அவர்களுக்கு பதவியை விட்டுக் கொடுங்கள் பார்ப்போம் என்று சீமான் கூறியுள்ளார்.

Categories

Tech |