எடப்பாடி தொகுதியில் 43 வருட வரலாற்றிலே திமுக வென்றதாக வரலாறு இல்லை என முதல்வர் தெரிவித்தார்.
நேற்று சேலம் மாவட்ட எட்டப்படியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த கனிமொழி அவர்கள் திமுகவின் பிரச்சாரத்தை எடப்பாடி தொகுதியில் வந்து தொடங்கியிருக்கிறார். எடப்பாடி சட்டமன்றதொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டை.புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஆயிரத்து தொள்ளாயிரத்து 77ல் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து முதல் முதலாக சட்டமன்ற பொதுத்தேர்தலில் சந்திக்கின்ற போது அப்போது நின்று வெற்றி பெற்ற பெற்றதில் இருந்து இன்று வரை திமுக வராத ஒரே தொகுதி எடப்பாடி தொகுதி.
43 வருடங்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தால் வெற்றி பெற முடியவில்லை. தமிழகத்தில் 234 தொகுதி சட்டமன்ற தொகுதி உள்ளது. ஆனால் எடப்பாடி தொகுதியில் 43 வருட வரலாற்றிலே திமுக வென்றதாக வரலாறு இல்லை. வென்றது இல்லை. அதேபோன்று எடப்பாடி தொகுதியைப் பொறுத்தவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது.
நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூன்று ஊராட்சி ஒன்றியங்களிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நம்மோடு கூட்டணி வைத்திருந்த கட்சிகள் தான் இன்று சேர்மனாக இருக்கிறார்கள். திராவிட முன்னேற்ற கழகம் வந்து இங்கே பிரச்சாரம் தொடங்குவது பகல் கனவாக தான் இருக்கும். அது நனவாகது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்டுகிறேன். இந்தத் தொகுதிக்கு மிகப்பெரிய பெருமை 234 தொகுதி தமிழகத்தில் இருந்தாலும் முதலமைச்சர் தொகுதி எடப்பாடி தொகுதி என்ற பெருமை உள்ளது.
நேற்றைய தினமே நான் கூறினேன் முதலமைச்சராக வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. இறைவன் கொடுத்தது இது. இந்த மக்களுக்கு நல்லது தொண்டு ஆற்ற இதன் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலமாக பல திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது. நான் விவசாய குடும்பத்தில் பிறந்து, கிராமத்தில் வளர்ந்தவன். அரசு பள்ளி மாணவன், ஆறாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தவன். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலான ஏழை மாணவர்கள் ஆகத்தான் இருப்பார்கள். அப்படிப்பட்ட மாணவனின் எண்ணங்கள் எனக்கு நன்றாக தெரியும்.
கனிமொழி இல்லை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் அத்தனை ஒட்டுமொத்த தலைவர்களும் சேர்ந்த பிரச்சாரம் செய்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கலகத்தை வீழ்த்த முடியாது. 2021ல் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி பெரும்பான்மையான இடத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். 2 பெரும் தலைவர்கள் கண்ட கனவை தொடர்ந்து நாங்கள் செயல்படுத்துவோம். ஆகவே எங்கள் அரசு மக்கள் அரசு. மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசு. மக்களுக்காக பணியாற்றுகின்ற அரசு. எனவே வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும் என முதல்வர் தெரிவித்தார்.