கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 17ஆம் தேதி நடைபெற்ற போராட்ட கலவரமாக மாறியது. இதில் கலவரக்காரர்களால் பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ், பள்ளி பேருந்து ஆகியவற்றை சேதம் செய்தனர். அதுமட்டுமில்லாமல் போலீஸ் பேருந்து உள்ளிட்டவை தாக்கப்பட்டதோடு சில வாகனங்கள் முற்றிலுமாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. இது குறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் இதுவரை 26 சிற்றார்கள் உள்ளிட்ட 399 பேரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர்களை தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சின்ன சேலம் அருகில் உள்ள பெரியசிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த சர்புதீன், உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்த சரண்ராஜ், வி.மாமந்தூர் கிராமத்தை சேர்ந்த லட்சாதிபதி, தொட்டியம் கிராமத்தை சேர்ந்த மணி ஆகிய 4 பேர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ் எறித்தது, பள்ளி மற்ற போலீஸ் பேருந்துக்களுக்கு தீட்டு கொளுத்தியது, போலீசார் மீது கற்களை வீசித் தாக்கியது உள்ளிட்ட முக்கிய குற்ற சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 4 பேரையும் எஸ். பி.பாகலவன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சி சரவணகுமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட 8 பேர் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.