கனியாமூர் பள்ளியில் 9,10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்புக்கள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து போராட்டக்காரர்கள் பள்ளி முழுவதையும் சூறையாடினர். பள்ளியில் இருந்த வாகனங்கள் அனைத்துக்கும் தீ வைக்கப்பட்டது மேலும் பள்ளி கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டு, மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அந்த பள்ளியில் மாணவர்கள் தொடர்ந்து படிப்பதற்கு சூழல் இல்லாத காரணத்தினால் வேறு பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்ட வந்தது.
மேலும் ஆன்லைன் மூலமாகவும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கனியாமூர் பள்ளி மாணவ, மாணவியருக்கு வேறு பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும், மாணவ மாணவிகளின் அழுத்தத்தை போக்குவதற்கு விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பின் மகேஷ் தெரிவித்துள்ளார். கட்டாய கல்வி முறை சட்டத்தின் கீழ் சேரும் மாணவ, மாணவியர்களிடம் கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்மையில் கனியாமூர் வன்முறையில் சேதப்படுத்த பள்ளியை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி ஆகியோருடன் பள்ளிகள் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.