Categories
சினிமா தமிழ் சினிமா

கன்னட நடிகர் சேத்தன் மீது FIR பதிவு….. எதற்காக தெரியுமா?… வெளியான பரபரப்பு தகவல்….!!!

கன்னட நடிகர் ரிஷிப் ஷெட்டி இயக்கிய நடித்துள்ள திரைப்படம் காந்தாரா. இந்த திரைப்படம் தொன்ம கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படம் கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடப் படக்குழு பணிகளை மேற்கொண்டது. அதன்படி தமிழ் மொழியில் மாற்றம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15ஆம் தேதி காந்தாரா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. இந்த படத்தின் இயக்குனரான ரிஷிப் ஷெட்டி பேட்டி ஒன்றில் கூறியது, படத்தில் இடம்பெற்ற பூட்டா கோலா இந்து கலாச்சாரத்தின் ஒரு பகுதி எனக் கூறினார்.

ஆனால் கன்னட நடிகர் சேத்தன் குமார் என்ற சேத்தன் அகிம்சா கூறும்போது, பூட்டா கோலா இந்து கலாச்சாரம் கிடையாது எனத் தொடரில் பதிவிட்டார். இதனை கண்டித்து பஜ்ரங்தள அமைப்பினர் குடல் கொடுத்தனர். மத உணர்வுகளை புண்படுத்தி விட்டார் என்றும் கூறினார். அதனை தொடர்ந்து அந்த அமைப்பை சேர்ந்த ஷிவ குமார் என்பவர் சேத்தனுக்கு எதிராக ஷேஷாத்திரிபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து மக்களை தவறாக வழிநடத்தல் என்ற பிரிவின் கீழ் போலிசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளார். மேலும் விசாரணை அதிகாரி முன் ஆஜராக சேத்தனுக்கு நோட்டீஸ் அனுப்பக்கூடாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு சில நாட்களுக்கு முன்பாக நீதிபதி ஒருவருக்கு எதிராகவும் புண்படுத்தும் வகையில் ட்விட்டரில் சேத்தன் பதிவிட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |