Categories
அரசியல்

“கன்னியாகுமரிக்கு விடிவு காலம்!”…. முதல்வர் உத்தரவாதம்…. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் காங்கிரஸ்….!!!!

சட்டசபை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளார். அந்த மனுவில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி-களியக்காவிளை இடையிலான 55 கிலோ மீட்டர் சாலை மற்றும் காவல்கிணறு-பார்வதிபுரம் வரையிலான 22 கிலோ மீட்டர் சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது.

எனவே பொதுமக்கள் நலன் கருதி அரசு அந்த சாலையை சீரமைக்க வேண்டும். கிளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பெறும் வகையில் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி தரவேண்டும். அதேபோல் மாணவ, மாணவிகள் வெளி மாநிலங்கள் அல்லது வெளி மாவட்டங்களுக்கு சென்று தான் சட்டப்படிப்பு படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்.

அதேபோல் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான 97.200 கி.மீ பயண தூரத்தை 35 கிலோ மீட்டர் வரை தூரம் குறைக்கும் வகையில் சாலையை ஒன்றாக இணைக்க வேண்டும். கிள்ளியூரில் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். கூட்டுக் குடிநீர் ராட்சத குழாய்களால் புதுக்கடை-பரச்சேரி மாநில நெடுஞ்சாலையில் சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளது.

இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த காங்கிரீட் குழாய்களுக்கு மாற்றாக சாலையோரம் டி-1 பைப்புகளை அமைத்திட வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை படித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அத்தனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று உத்தரவாதம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தற்போது அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |