தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டுவிளை கலைஞர் நகரில் கட்டிட தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 26- ஆம் தேதி தனது நண்பரான அருண் மார்த்தாண்டன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த குமார், அருண் மார்த்தாண்டன் ஆகியோரிடம் மணிகண்டன் தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அருண் மார்த்தாண்டன் கத்தியால் மணிகண்டனின் காதில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அழிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து மணிகண்டனின் தம்பி பாலமுருகன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குமார், அருண் மார்த்தாண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.