Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி டீக்கடை விபத்து….. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி டீக்கடை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கன்னியாகுமரி மாவட்டம், பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள ஷபிக் என்பவரின் டீக்கடையில் இன்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இந்த  விபத்தில் கடையில் வேலை பார்த்து வந்த மூசா, பிரவீன், சேகர் மற்றும் அங்கு தேநீர் அருந்த வந்த சுப்பையன், சுதா, சந்திரன், சுசீலா மற்றும் ஒருவர் உட்பட 8 பேர் தீக்காயம் அடைந்தனர்.இந்த செய்தியை கேட்டு நான் வருத்தமடைந்தேன். மேலும் தீக்காயம் அடைந்தவர்களுக்கு ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திடம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா  ரூ.50,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |