கோவை மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகை பகுதியில் வசித்து வருபவர் டி.அறிவழகன். இவர் மேட்டுப்பாளையத்திலுள்ள அரசு போக்குவரத்துக்கழக கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். அத்துடன் தடகளம் மற்றும் சைக்கிள் வீரராகவும் இருக்கிறார். இந்நிலையில் அறிவழகன் சாதாரண சைக்கிள் வாயிலாக கன்னியாகுமரி to சென்னை வரை 760 கிலோ மீட்டர் தொலைவினை பகலில் பயணம் மேற்கொண்டு 4 நாட்களில் கடந்துள்ளார்.
அவ்வாறு சாதாரண சைக்கிள் வாயிலாக தொடர்ந்து இடை விடாமல் சவாரி செய்து ஒரேநாளில் 24 மணிநேரத்தில் 406 கிலோ மீட்டர் தொலைவினை கடந்துள்ளார். இதையடுத்து சாதனை படைத்த அறிவழகனுக்கு மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, ரியல் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸ் நிறுவன சான்றிதழை வழங்கி பாராட்டினார்.