கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என்று சுனில் அராரோ தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் சுனில் அராரோ தேதியை அறிவித்தார்., தமிழ்நாடு , கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும், வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 19ஆம் தேதி கடைசி நாளாகும் . மார்ச் 20-ந்தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 22-ந்தேதியாகும். வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 22ஆம் தேதி ஆகும். அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும், மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக நடைபெறும்’’ என்றார்.
இதனை தொடர்ந்து கன்னியாகுமரி தொகுதியில் நாடாளுமன்ற தொகுதி எம்.பி ஆக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்தகுமார் இருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 28ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக உள்ளது. இதற்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என்று சுனில் ஆராரோ தெரிவித்துள்ளார்.