விமானத்தின் மூலம் அரிய வகை கழுகு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஒக்கி புயல் ஏற்பட்டது. இந்த புயல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது ஆசாரிப்பள்ளம் பகுதியில் அரிய வகை சினேரியஸ் கழுகு இருந்தது. இதனை வனத்துறையினர் மீட்டு உதயகிரி உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். அங்கு அந்த கழுகிற்கு ஒக்கி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த வகை கழுகு காட்டில் கூட்டமாக வாழும் தன்மையுடையது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள கெரு என்ற இடத்தில் இந்த கழுகினங்கள் அதிகம் வசித்து வருகின்றன.
எனவே இந்த கழுகை ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஜோத்பூர் உயிரியல் பூங்காவில் விடுவதற்கு வருவாய்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். பின்னர் அந்த கழுதை பாதுகாப்பான முறையில் தமிழ்நாட்டில் இருந்து விமான மூலம் எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த கழுகு வாகன மூலம் சாலை மார்க்கமாக வண்டலூர் அறிஞர் அண்ணா பல உயிரியல் பூங்காவிற்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி வரை கொண்டுவரப்பட்டது. அங்கு 2 நாட்கள் பராமரிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் காற்றோட்ட வசதியுடன் கூடிய கூண்டில் அடைக்கப்பட்டு இந்த கழுகு எடுத்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து மதியம் ஜோத்பூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு இந்திய வன உயிரின நிறுவனத்தின் மூலம் டிரான் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் அந்த கழுகு ஜோத்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து இயற்கை சூழல் நிறைந்த கெரு பகுதியில் விடப்படும்.