Categories
கேரளா மாநிலம் தேசிய செய்திகள்

கன்னியாஸ்திரி கொலை…. 28 வருடம் கழித்து…. பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை…!!

கேரளாவை உலுக்கிய கன்னியாஸ்திரி கொலை வழக்கில் 28 வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது 

மதபோதகர்ருக்கும் கன்னியாஸ்திரி ஒருவருக்கும் இருந்த திருமணத்தை மீறிய உறவை நேரில் கண்டதாக கேரளா மாநிலம் கோட்டயத்தில் சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா என்பவர் 28 வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மதபோதகர் தாமஸ்க்கும்  இரண்டாம் குற்றவாளியான கன்னியாஸ்திரி செபிக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் திருவனந்தபுரம் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரள மாநிலத்திலுள்ள கோட்டயத்தை சேர்ந்த தாமஸ்-லீலா தம்பதியின் மகள் அபயா. இவர்  தனது 19-வது வயதில் கோட்டயத்தில் அமையப் பெற்றிருந்த தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.  அப்போது அவர் 1992 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி அவர் தங்கியிருந்த விடுதியில் உள்ள கிணற்றில் இறந்த நிலையில் கிடந்தார். அவரது கழுத்து மற்றும் உடம்பெல்லாம் காயங்கள் இருந்த நிலையில் காவல்துறையினர் வழக்கை விசாரித்து வந்தனர். பின்னர் அந்த வழக்கு குற்றவியல் காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது.

ஆனால் உள்ளூர் காவல் துறையினர் மற்றும் குற்றவியல் காவல் துறையினர் இணைந்து மேற்கொண்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக முடிவுசெய்தனர்.இதனை ஏற்காத அவரின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து 1993 ஆம் ஆண்டு சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டது. மூன்று முறை விசாரித்த சிபிஐ வழக்கில் சாட்சி இல்லை என்று கூறி முடிக்க திட்டமிட்டனர். அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தத்தினால் சிபிஐ அதிகாரி ஒருவர் தனது பத்து வருட பணிக் காலத்தை வேண்டாம்  என்று கூறி உடனடியாக ராஜினாமா செய்துள்ளார்.

இதனை அறிந்து கொண்ட சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை நிச்சயமாக சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று வேறு ஒரு குழுவை நியமித்தது. 2007 ஆம் ஆண்டு அந்தக் குழு வழக்கின் உரிய விசாரணையை தொடங்கினர். பின்னர் 2008 ஆம் ஆண்டு அந்த வழக்கில் கொலை மற்றும் சாட்சிகள் அழித்த பிரிவின்கீழ் மத போதகரான தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் தற்போது பல வருடங்களாக கேரளா மக்கள் ஆவலோடு எதிர்பார்த்த தீர்ப்பை தற்போது சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது.

Categories

Tech |