நடிகர் விமல் நடிப்பில் நேற்று வெளியாகவிருந்த கன்னிராசி திரைப்படத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழ் திரையுலக நடிகர் விமல் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கன்னி ராசி’. இந்த திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று வெளியாக இருந்த இந்த திரைப்படத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வினியோக உரிமைக்காக 17 லட்சத்தை கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர்.
ஆனால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டுக்குள் திரைப்படத்தை வெளியிடாமல் தற்போது வேறு நிறுவனத்தின் மூலம் ‘கன்னிராசி’ திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக மீடியா டைம்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனை விசாரித்த சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் இந்த திரைப்படம் வெளியாக இடைக்கால தடை விதித்துள்ளது.