Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு…”வலிய வந்து சிலர் பிரச்சனை”……. உதவியை எதிர்பாக்காதீர்கள்….!!!

கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று பழைய நினைவுகள் மனதில் உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அதிகமாக பணிபுரிவது அவசியம். பண வரவு எதிர் பார்த்ததை விட குறைவாகத்தான் இருக்கும் நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். இன்று நீங்கள் விலகி சென்றாலும் வலிய வந்து சிலர் பிரச்சனைகள் செய்யக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள். கூடுமானவரை வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள்.

இன்று நீங்கள் எந்த ஒரு பணியையும் செய்யாமல் கொஞ்சம் அமைதியாக இருப்பது ரொம்ப சிறப்பு. ஏனென்றால் இன்று உங்களுக்கு சந்தராஷ்டம் தினம் இருப்பதால் கொஞ்சம் பொறுமையாகவே இருங்கள். பார்த்துக் கொள்ளலாம். அதே போல மாணவ செல்வங்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண்பதற்கு கொஞ்சம் கடுமையாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். மற்றவர்களிடம் எந்தவித உதவியையும் எதிர்பாக்காதீர்கள் அப்படி எதிர்பார்த்தால் வில்லங்கத்தில் முடியும். எதிர்ப்புகள் ஓரளவு இருக்கும். இன்று மனக்குழப்பமும் இருக்கும். கடன் பிரச்சினை கூட கொஞ்சம் தலை தூக்கலாம்.

என்று நீங்கள் பொறுமையை மட்டும் கைவிடாதீர்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனம் நிம்மதியாக காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |