கன்னி ராசிக்கான சித்திரை மாத பலன்கள்..! உத்திரம், ஹஸ்தம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த தங்களுக்கு இந்த தமிழ் மாத ராசிபலன்கள் என்ற அடிப்படையில் 2020ஆம் ஆண்டு சார்வரி வருடம் சித்திரை மாதம் உண்டான, சுப அசுப பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட திசைகள், சந்திராஷ்டம தினங்கள் மற்றும் வணங்க வேண்டிய தெய்வங்கள் இவையெல்லாம் பற்றி பார்க்கலாம். உங்கள் ராசிக்கு அதிபதியான அதிதேவதையான இரண்டு தெய்வங்கள் இருக்கும். அவர்கள் தான் உங்களை எப்பொழுதும் வழி நடத்தக் கூடியவர்கள். எந்த தெய்வங்கள் இருந்தாலும் அவர்கள் உங்களுக்கு முதல் தெய்வம். அப்படிப் பார்க்கும் பொழுது ராசிநாதனான புதனுக்கு அதிபதியான மகாவிஷ்ணு இவர்களை நான் நீங்கள் பிரார்த்தனை செய்து இந்த மாத நிகழ்ச்சிகள் மேற்கொள்ளுங்கள்.
ராசிக்கு பத்தாம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் ; தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மிகச் சிறப்பான யோகம் என்று சொல்லக்கூடியது தான். ஜீவன ஸ்தானம், தொழில் ஸ்தானம், கர்ம ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த பத்தாம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் ராகுவைப் போல் கொடுப்பார். இல்லை தொழிலில் முன்னேற்றம் சரிந்திருந்த தொழில் எல்லாம் மேலே உயருகிறது. தொழிலில் நமக்கு இடையூறு செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். புதிய தொழில்கள் ஆரம்பித்தல் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சுய தொழிலில் லாபமும் வியாபார முன்னேற்றம் வெளிநாட்டில் செய்யக்கூடிய தொழில் ஏற்றுமதி-இறக்குமதி பங்கு வர்த்தகம் அந்நியச் செலாவணி நமக்கு ஒரு நல்ல நன்மையை கொடுக்கும். கன்னி ராசி நேயர்கள் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு நல்ல உத்தியோக முன்னேற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு பாராட்டுகள் இவை அனைத்தும் கிடைக்க கூடிய அமைப்பு உண்டு.
ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால்; சுக்கிரனுடைய வீட்டில் ஆட்சி பலம் மிகச்சிறப்பாக யோகம். ஒன்பதாவது யோகம் பாக்கியஸ்தானம் நமக்கு பெற்ற ஒரு நன்மை பாக்கிய ஸ்தானத்தில் அந்த ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரன் அதுமட்டுமில்லாமல் செல்வம் கணம் போக பாக்கியங்கள் சந்தோசங்கள் இதற்கெல்லாம் அதிபதியாக இருக்கக்கூடிய வரும். சுக்கிரன்தான் களத்திரகாரகன் என்று சொல்வார்கள், அது வலுப்பெற்று கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்பட்டு இனம் புரியாத சந்தோசங்கள் இவையெல்லாம் ஏற்படும். தொழிலில் ஒரு வளர்ச்சி மூலாதாரத்தில் ஒரு வளர்ச்சியை பழைய கடன்கள் நிவர்த்தி, புதிதாக இன்வெஸ்ட்மெண்ட் பண்றது எதிர்பாராத யோகம் சகடை யோகம் இவையெல்லாம் ஏற்படக்கூடிய அமைப்பு இந்த மாதத்தில் இருக்கிறது.
ராசிக்கு எட்டாம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால்; உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் 6 கன்னி ராசியும் கணவனாக இருந்தாலும் சரி மனைவியாக இருந்தாலும் சரி உடல்நிலையில் கவனம் தேவை ஜலம் காய்ச்சல் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் அடி வயிறு வலி கட்டிகள் இது போன்ற பிரச்சனைகள் எல்லாம் வரக்கூடிய அமைப்புகள் ஏற்படும். அரசு உத்தியோகம் அரசு துறைகளில் வேலை செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அரசியல்வாதிகளும் ரொம்ப கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். ரியல் எஸ்டேட் பூமி மனை வீடு வாங்குபவர்களுக்கும் யோகங்கள் உண்டு. தொழில் செய்பவர்களுக்கும் யோகங்கள் உண்டு. விவசாயிகளுக்கும் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாக கூடிய அமைப்புகள் உண்டு.
ஏழாம் இடத்தில் புதன் சஞ்சரிக்கிறார் குருவின் வீட்டில்; திருமணப் பேச்சுகள் கைகூடும். தடைபட்டு வந்த திருமணங்கள் நடக்கக்கூடிய அமைப்புகள் அமைப்புகள் ஏற்படும். அதே சமயம் கல்வி பயிலக் கூடிய மாணவர்களுக்கு கல்வி துறையில் சிறப்பான கல்வி முன்னேற்றங்கள், பின்தங்கியிருந்த மாணவர்கள் கல்வியில் முன்னாடி வந்து இவனை எப்படி எத்தனை மார்க் வாங்கினா, அப்படின்னு ஆச்சரியப்படும் அளவுக்கு நடக்கக்கூடிய அமைப்புகள் எல்லாம் நடக்கும் . விளையாட்டு கேளிக்கை இதில் இருக்க கூடியவர்களுக்கு மிகச் சிறப்பான யோகங்கள் ஏற்படும். விளையாட்டு துறையில் சாதிக்கலாம், கேளிக்கை, சினிமா பாடல், நாடகங்கள் போன்றவற்றில் இருப்பவர்களுக்கும், பொதுத் துறையில் இருப்பவர்களுக்கும் நன்மைகள் அதிகமாக நடக்கக்கூடிய ஒரு நல்ல நேரம் என்றும் சொல்லலாம்.
ஐந்தாமிடத்தில் செவ்வாய் குரு சேர்க்கை, குரு புண்ணியஸ்தானம்; குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் அல்லது வீட்டில் குழந்தை பிறக்கக் கூடிய வயதில் இருக்க கூடியவர்களுக்கு இருந்தால் குழந்தை பிறக்கும் அல்லது வாரிசுகளுக்கு குழந்தை பிறக்கலாம் , பேரன் பேத்திகள் ஆகலாம். வம்சம் விருத்தி ஏற்பட கூடிய நல்ல மேன்மை உண்டாகும். அதுமட்டுமில்லாமல் பூமி மனை வாங்க கூடிய அமைப்பு பழைய வீட்டை இடித்துக் கட்டுவது புதிய வீடு வாங்குதல் புதிய மனை வாங்கி போடுதல் விவசாய நிலம் வாங்குதல் இவை எல்லாம் நடக்கும். குரு 5-ல் இருப்பதனால் மிக சிறப்பான நாளாகும். மூணு மாதத்தில் குரு அதிசாரமாக வந்து இருப்பார். இந்த மூன்று மாதத்தில் பல நன்மைகளை உங்களுக்கு செய்ய காத்திருக்கிறார்.
குரு பார்வை இருக்கிறது அதனால் மிகவும் சிறப்பான யோகம் என்று சொல்லலாம். நான்காமிடத்தில் அர்த்தாஷ்டம என்று சொல்லக்கூடிய சிறுசிறு பிரச்சினைகள் வந்து விலகும். வீண் அலைச்சல் உடல் மன உபாதைகள் மனக்கஷ்டங்கள் இதையெல்லாம் ஏற்படும். தேவையில்லாத வம்பு வழக்குகள் வரும் அனைவரையும் அனுசரித்துச் செல்லும் சூழ்நிலை அமையும். சில பேருக்கு இடமாற்றம் சில பேருக்கு காலுக்குக் கீழ் அடிபட கூடிய வாய்ப்புகள் இருக்கும். அதனால் பொதுவாக கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மாதம். கன்னிராசி என்றாலே இந்த மாதத்தில் 80 சதவிகிதம் நன்மைகளை தரக்கூடிய நல்ல மாதமாகவே இருக்கிறது.
கல்வி பயிலக் கூடிய மாணவர்கள் 85 சதவீத நன்மைகளும், கலைத்துறை அரசியல்வாதிகள் பெண்கள் இவர்களுக்கு 90 சதவீத நன்மைகளும், சுய தொழில் உத்தியோகம் வியாபாரம் விவசாயம் செய்பவர்களுக்கு 90 சதவீத நன்மைகளும், ஏற்படக்கூடிய நல்ல மாதமாக இருக்கிறது. கன்னி ராசி நேயர்கள் முக்கியமான பணிகளை தவிர்க்க வேண்டிய சந்திராஷ்டம தினம் என்று பார்த்தால் சித்திரை மாதம் 9ஆம் நாள் புதன்கிழமை பகல் 2 மணி 11 நிமிடம் முதல் சித்திரை மாதம் 11ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு ஒரு மணி 10 நிமிடம் வரை இந்த சந்திராஷ்டமம் சம்பவிக்கிறது எனவே அந்த நேரத்தில் முக்கியமான பணிகளை தவிர்த்து இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்டமான வண்ணம்: பச்சை, மஞ்சள்
அனுகூலமான திசை: வடக்கு, வடகிழக்கு
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7
வணங்க வேண்டிய தெய்வம்: நாராயணபெருமாள்
மகாவிஷ்ணுவை வழிபட்டு வந்தால் இந்த மாதம் முழுவதும் தங்களுக்கு ஒரு இனிமையான மாதமாக அமையும்.