கன்னி ராசி அன்பர்களே …! இன்று நல்ல கட்சி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். சில நேரங்களில் மட்டும் சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும். பேச்சில் மட்டும் நிதானம் இருக்கட்டும். அதேபோல் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். ஜீரண கோளாறு போன்று ஏதாவது ஆரோக்கிய குறைவு இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும்போது கவனம் கொள்ளுங்கள். பிள்ளைகள் நீங்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலைக் கொடுக்கும். மன தைரியத்தால் லட்சியம் இன்று காண்பீர்கள். வசீகரமான பேச்சால் அனைவரையும் கவரக் கூடிய சூழலும் இருக்கும். கோபத்தை மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.
காதலர்களுக்கு நிதானமான பேச்சு நன்மையை கொடுக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.