Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு… ஆதரவு கிடைக்கும்.. பழக்க வழக்கங்கள் விரிவடையும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாளாகவே இருக்கும். வரவைக் காட்டிலும் செலவு கொஞ்சம் கூடும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் ஓரளவு விரிவடையும். இன்று அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், மக்கள் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். இன்று  சக மாணவரிடம் மாணவர்கள் பேசும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் வேண்டும், எதிர்கால கல்வியை பற்றி சிந்தனை மேலோங்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். பொருளாதாரமும் சிறப்பாகவே இருக்கும், சமூகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். அதுமட்டுமில்லை இன்று நீங்கள் மிக முக்கியமாக செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால் வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் பண பரிவர்த்தனை போன்ற விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

கூடுமானவரை யாரிடமும் எந்தவித வாக்குறுதிகளையும் தயவு செய்து கொடுக்க வேண்டாம். பஞ்சாயத்துகளிலும் கலந்து கொள்ள வேண்டாம், இதை மட்டும் நீங்கள் இன்று கடைபிடித்தால் ரொம்ப நல்லது. முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் ரொம்பவே சிறப்பு. அதுமட்டுமில்லை இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுபோலவே இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |