Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு..ஆதரவு பெருகும்..முயற்சிகள் வெற்றியடையும்..!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். பண கஷ்டம் தீரும். அது மட்டுமில்லாமல் இன்று கடன்கள் அடைந்து விடக் கூடிய சூழல் இருக்கும். இன்று தன வரவில் வைத்துக் கொள்வீர்கள். முடிந்தால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ரொம்ப சிறப்பாகவே இருக்கும். சரியான நேரத்திற்கு மட்டும் தூங்கச் செல்வது ரொம்ப நல்லது.

இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும் சிறப்பான முன்னேற்றம் இருக்கும், இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவராத்திரி என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.

முடிந்தால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை மட்டும் அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்டநிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |