கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய செயல்கள் நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும். தொழில் வியாபாரத்திலிருந்த தடங்கல்கள் ஓரளவு சரியாகும். லாபம் சுமாராக தான் வந்து சேரும். முக்கியத் தேவைக்கு நீங்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள், ஒவ்வாத உணவுகளை எப்பொழுதுமே தவிர்த்துவிடுங்கள். பெண்கள் கணவரின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பார்கள், இன்று வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் கொஞ்சம் வரலாம். சரியான உணவை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். எந்த காரியம் செய்தாலும் கொஞ்சம் தாமதம் இருக்கும்.
எல்லாவற்றிலும் ஒரு பயம் இருக்கும், எதைப்பற்றியும் கவலை வேண்டாம், பயம் இல்லாமல் காரியத்தை எதிர்கொள்ளுங்கள். புதிய நபர்களின் நட்பு உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் அவசியம், அதாவது வாகனத்தில் செல்லும் பொழுது கூடுதல் கவனம் மிக அவசியம். இன்று மாணவச் செல்வங்கள் கடுமையாக பாடத்தை படிக்க வேண்டும், கல்வியில் ஓரளவு வெற்றி பெற முடியும். கஷ்டப்பட்டு படியுங்கள் படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள். தேர்வு முடியும் வரை சரியான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள் காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்