கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள். கூட்டு தொழிலில் லாபம் ஓரளவு வந்து சேரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். இன்று தொழில் வியாபார ரீதியாக சில நெருக்கடிகள் நிலவும் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். தொழிலில் மிகவும் மந்தமான நிலை நிலவுவதால் கொஞ்சம் லாபம் குறைந்து தான் காணப்படும். பொருள் தேக்கம் ஏற்படும்.
இன்று கூட்டாளிகளிடையே ஒற்றுமை என்ற நிலையே நிலவும். யாரிடமும் இன்று வாக்குவாதங்கள் மட்டும் செய்ய வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். உடல்நிலையை பொருத்தவரை ஓரளவு சீராக இருக்கும், இருந்தாலும் சரியான நேரத்திற்கு மட்டும் தூங்கச் செல்லுங்கள் அது போதும். குடும்பத்தில் யாரிடமும் எந்தவித வாக்குவாதங்களும் செய்யாமல் இருங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். முடிந்தால் தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. இன்று யாரிடமும் கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம் அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் ஓரளவு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது போலவே இன்று இல்லத்தில் விஷ்ணுபகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக வழங்கிவிட்டு இன்று நீங்கள் பிறகு காரியங்களைச் செய்தால் காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை