Categories
ஆன்மிகம் ராசிபலன்

கன்னி ராசிக்கு… உற்சாகம் அதிகரிக்கும்… போட்டிகள் விலகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் காரிய வெற்றி அடைவீர்கள். அடுத்தவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் மட்டும் கவனமாக இருங்கள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாளாக இருக்கும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் . வாகனம் வாங்க கூடிய யோகங்களும் உள்ளன. கூட்டாளிகள் உங்களுடைய குணமறிந்து நடந்து கொள்வார்கள்.  மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகி செல்லும். கல்வி பற்றிய பயமும் விலகி செல்லும். அதேபோல் சக மாணவர்களுடன் இருக்கக்கூடிய ஒத்துழைப்பு அதிகமாகவே இருக்கும். இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். ஒற்றுமை பலப்படும்.

தந்தையாரின் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். எதையும் யோசித்து பேசுங்கள். ஆன்மீகத்தில் எண்ணம் செல்லும். இன்று காதலர்களுக்கு ஓரளவு இனிமை காணும் நாளாக இருந்தாலும் பேச்சில் எப்போதுமே கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு தானமாக கொடுங்கள் உங்களுடைய வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். என்று உங்களுக்கு

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்டமான எண் : 3 மற்றும் 4

அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை

Categories

Tech |