கன்னி ராசிஅன்பர்களே…! இன்றய நாள் உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். தங்கள் பொருட்களை ரொம்ப கவனமுடன் பாதுகாக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாள வேண்டும். எதையுமே எச்சரிக்கையுடன் தான் நீங்கள் செய்ய வேண்டும். வியாபாரிகளுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சிரமம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் நாட்டம் இருக்கும். சமாளித்து முன்னேறி கூடிய திறமை இன்று இருக்கும்.
இன்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் சிறப்பாக செய்வீர்கள். அதற்காக நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். ஆனால் போட்டிகளில் எதிர்த்துதான் நீங்க காரியங்களை செய்ய வேண்டியிருக்கும். சாதகமான பலன்கள் ஓரளவே கிடைக்கும். முடிந்தால் இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். அது மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனம் வேண்டும். சரியான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும்.
வாகனத்தில் செல்லும் போது ரொம்ப மித வேகமாகச் செல்ல வேண்டும் தயவு செய்து உடல் நிலையில் கவனமாக இருங்கள் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்பொழுது பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை இல்லத்தில் நடத்தினால் காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் இளம் சிவப்பு நிறம்