Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…கனவுகள் நனவாகும்.. முயற்சிகள் வெற்றியாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று முயற்சிகளில் வெற்றி கிடைத்து முன்னேற்றம் கூடும் நாளாகவே இருக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் நீங்கள் சிறப்பாகவே செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். உத்தியோக உயர்வுக்கு அறிகுறிகள் தோன்றும் கல்யாண கனவுகள் அனைத்தும் நனவாகும். காரிய வெற்றிக்கு உடன்பிறப்புகள் உதவிகரமாக இருப்பார்கள். இன்று  தொழில் போட்டிகள் விலகிச்செல்லும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க பெறுவீர்கள். மறைமுகமாக இருந்து எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் பரிபூரணமாக நீங்கும். மனமும் அமைதியாக காணப்படும், மகிழ்ச்சி இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவ பெருமான் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள்

Categories

Tech |