Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்…வாக்குவாதங்களை தவிர்த்திடுங்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே …!   இன்று உங்களுடைய செயல்களில் நேர்மை திறன் அதிகரிக்கும்.  தொழில் வியாபாரம் அபரிவிதமான வளர்ச்சியை கொடுக்கும்.  தாராள பணவரவு கிடைக்கும்.  மனைவி விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.  குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.  இன்று நுண்கலை கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும்.  உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும்.

குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும்.  சுபகாரியங்கள் வெகுவாக கூடிவரும்.  தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.  சரக்குகளை அனுப்பும் பொழுது கவனம் இருக்கட்டும். இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். எந்தவித வாக்குவாதங்களும் இல்லாமல் செல்லும் காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும்.

இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.  அதுமட்டுமில்லாமல் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் :  மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்

Categories

Tech |