கன்னி ராசி நேயர்களே..! இன்று நட்பின் பெருமையை எண்ணி மகிழ்வீர்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கையை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வாக்குருதியை நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். இன்று உங்களது கோரிக்கைகளும் ஆசைகளும் நிறைவேறும். தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்கள் வந்து செல்லலாம். மற்றவர்கள் செய்யும் சிறு தவறுகளை மன்னிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
அரசியலில் உள்ளவர்களுக்கு பதவியை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். சமூக அக்கறையுடன் தான் இன்று நீங்கள் ஈடுபடுவீர்கள். பொதுநல காரியங்களில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களுக்கு உதவிகளை செய்கிறீர்கள் இன்றைய நாள் மகிழ்ச்சியாகவும் நீங்கள் காணப்படுகிறார்கள். உறவினர்களிடம் மட்டும் கொஞ்சம் பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சின்னச் சின்ன பிரச்சினைகள் இருக்கும். எதையும் பேசி தீர்த்துக் கொள்வது ரொம்ப நல்லது.
பிள்ளைகளிடம் இன்று அன்பாகவே நடந்து கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்