Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு… செலவுகளை குறைத்து கொள்ளுங்கள்.. பாராட்டுகளை பெறுவீர்கள்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று கூடுமானவரை நீங்கள் ரொம்ப கவனமாக தான் இருக்கவேண்டும். குடும்பத்துடன் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை தயவு செய்து குறைத்து கொள்ளுங்கள். சேமிப்பதற்கு பழகிக்கொள்ளுங்கள். உறவினர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார், புதிய நபரிடம் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். வியாபாரத்தில் கொஞ்சம் கடினமான சூழலில் நிலவும்.

உத்தியோகத்தில் ஓரளவு பாராட்டுக்கள் கிடைக்கும். இன்று  எதைச் செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் கவனமாக செய்வது நல்லது. பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சின்னச் சின்ன சண்டைகள் வரக்கூடும். பேசும்போது மட்டும் நிதானம் வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும். இன்று வாக்குறுதிகளை கொடுக்காமல் இருப்பது ரொம்ப நல்லது. யாரிடமும் பணத்தை கடனாக பெறாதீர்கள்.

 அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்

அதிஷ்ட திசை: தெற்கு

Categories

Tech |