கன்னி ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும். கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கு மாணவர்கள் கொஞ்சம் கவனமாகத்தான் செயல்பட வேண்டும். கடின உழைப்பால் தொழில் விருத்தி கொஞ்சம் காணலாம். கௌரவ குறைவு ஏற்படாத வண்ணம் தயவு செய்து பார்த்துக்கொள்ளுங்கள். இன்று பொருளாதார நிலை ஓரளவு திருப்திகரமாக இருக்கும். முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பண விஷயங்களிலும் பிறரை நம்பி வாக்குறுதிகள் ஏதும் கொடுக்காதீர்கள். முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இன்று மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு கொஞ்சம் கடுமையாகவே உழைக்க வேண்டும்.
எழுதித்தான் பாடங்களை படிக்க வேண்டும். வீண் அலைச்சலைக் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பயணங்கள் செல்லாது இருப்பது ரொம்ப நல்லது. பயணங்களின் பொழுது மற்றவரிடமிருந்து எந்தவித உரையாடலும் வைத்துக் கொள்ளாதீர்கள். கூடுமானவரை பொருட்களின் மீது கவனமாக இருங்கள். நிதி மேலாண்மையில் கொஞ்சம் கவனம் வேண்டும். பணப்பரிவர்த்தனையில் ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும். யாரிடமும் இன்று நீங்கள் கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு எப்பொழுதும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை நிறம்