கன்னி ராசி அன்பர்களே..! இன்று தாயின் அன்பும் ஆசியும் உங்களுக்கு நல்ல விதமாகவே கிடைக்கும். அது உங்களுக்கு பலமாக அமையும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் தொடர்பு பழம்பெரும் பணவரவு நன்மையை கொடுக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்து மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மிகவும் சாமர்த்தியமாக காரியங்களை செயல்படுத்துவீர்கள். கூட்டாளிகளே தயவுசெய்து அனுசரித்துச் செல்வதன் மூலம் அபிவிருத்தியை நீங்கள் பெருக்கிக்கொள்ள முடியும்.
திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளிவைப்பது ரொம்ப நல்லது. சிலருக்கு வீடு மனை வாங்கக்கூடிய யோகமும் இருக்கும். இருந்தாலும் வீண் செலவை மட்டும் எப்பொழுதுமே தயவுசெய்து கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள், செலவை நீங்கள் யோசித்து அதற்கு ஏற்றார் போல் செயல் படுவது நல்லது. உங்களுடைய சிந்தனை திறனும் இன்று அதிகரிக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்வது ரொம்ப நல்லது, வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று நீங்கள் இல்லத்திலேயே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்