கன்னி ராசி அன்பர்களே..! இன்று பிறர் விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். திட்டமிட்ட செயல் ஒன்றில் அதிக நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகி செல்லும். பணவரவும் சிறப்பாகவே இருக்கும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் ஏற்படும். இன்று பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். வீணான பழிச்சொல் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கைநழுவிப், பொருளாதார தடைகளை கொஞ்சம் ஏற்படுத்தும்.
உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது, மற்றவர்களை அனுசரித்துச் செல்வதும் ரொம்ப நல்லது. இன்று மாணவக் கண்மணிகள், பொதுமக்களும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. வைரஸ் தொற்றின் காரணமாக இந்திய அரசாங்கம் சொல்கிற அனைத்து விஷயங்களும் பொதுமக்களாகிய நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தயவுசெய்து இந்த விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம்.
உலக நாடுகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உயிரிழப்புக்கு காரணம், அந்த நாட்டினுடைய மக்களின் அலட்சிய போக்கு தான். தயவுசெய்து நாம் இவர்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இந்த அலட்சிய போக்கை கைவிட்டு, அரசாங்கம் சொல்கின்ற விஷயங்களை முறையாக நாம் நடைமுறைப்படுத்தி இந்த வைரஸ் தொற்றினை நம்மை நாமே காத்துக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம். கூடுமானவரை நம் உடல் நலத்தை பேணி காப்போம்.
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
அதிஷ்ட திசை: வடக்கு